பள்ளியின் வரலாறு
எம் பள்ளியானது 01.01.1955-ல் தொடங்கப்பட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை (அங்கீகார எண் 1127/62DEO) இயங்கி வந்தது. தொடக்கப்பள்ளியாக இருந்த இப்பள்ளியானது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 2006-ல் (அங்கீகார எண் 169/ப.க நாள் 13.09.2006.) நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ஆணையிடப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தை சார்ந்த கொடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது விருத்தாசலத்திற்கு மேற்கு திசையில் இயற்கை வளமான சூழலுடன் அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு கொடுக்கூர் மற்றும் பெரம்பலூரில் இருந்து மாணவர்கள் வந்து பயின்று வருகின்றனர்.